Saturday 26 November 2022

யாழ். வேம்படி மாணவிகள் 65 பேர் '9ஏ' சித்திகளை பெற்று சாதனை..!!!

SHARE

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 65 பேர் 9 பாடங்களிலும் 9 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.

வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 249 மாணவிகள் 2021ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில், 65 மாணவிகள் 9 ஏ சித்தியையும், 61 மாணவிகள் 8 பாடங்களில் சித்தியைப் பெற்றுள்ளனர்.

வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை 2021ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 100 வீத சித்தியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




SHARE