சுதந்திரமானதும் நீதியானதுமான. தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (Caffe )ஏற்பாட்டில் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பெண் செயற்பாட்டாளர்களுக்கான. "சமூகஊடகம் மற்றும் இணைய அறிவை வளர்த்துக் கொள்ளும் ஐனனி செயலமர்வு கடந்த 23.11.2022 அன்று யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூட குவி மாட மண்டபத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் S.மயூரன் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் ஊடகவியலாளர் க. கலாவர்சினி வளவாளராக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.
தொழில்நுட்ப அறிவு பாதுகாப்பு தொடர்பில் பெண்கள் ஆண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஆயினும் குறிப்பாக பெண் செயற்பாட்டாளர்கள் அரசியல் பணியாளர்கள் தேர்தல் கால நெருக்கடி நிலைகளில் இருந்தும் தம்மை விசேடமாக பாதுகாத்துக்கொள்ள இவ்வாறான கற்றல்கள் அவசியம் என்பதன் அடிப்படையில் இப் பயிற்சிகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி.