ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது, அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2022 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் உள்ளோம். இம்மாதத்தில் இறுதியில் சுக்கிரன் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் டிசம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் ஏற்கனவே சனி பயணித்து வருகிறார். இந்த மகர ராசியில் ஜனவரி 17 ஆம் தேதி வரை சனியும், சுக்கிரனும் இணைந்து ஒன்றாக பயணிப்பார்கள்.
டிசம்பர் மாதத்தின் கடைசியில் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் பல ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். புத்தாண்டின் தொடக்கத்திலேயே சுக்கிரனின் நிலையால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இப்போது மகரம் செல்லும் சுக்கிரனால் டிசம்பர் 29 முதல் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரவுள்ளது. இப்பெயர்ச்சியின் போது சுக்கிரன் மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கு. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளோருடன் தொடர்பு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். வேலை செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல செய்தியைப் பெறுவார்கள். நிதி விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் கிடைக்கும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கும் சுக்கிர பெயர்ச்சி நற்பலன்களை வழங்கும். சுக்கிரன் கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
துலாம்
டிசம்பர் மாத கடையில் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தொழிலில் நற்பலன்களைப் பெறுவார்கள். ஏனெனில் சுக்கிரன் துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதன் விளைவாக பல சுபகாரியங்களை இக்காலத்தில் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்தி வரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் லாபத்தை தரும் ஒரு புதிய ஒப்பந்தத்தை இக்காலத்தில் முடிப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்கு சுக்கிரன் செல்வதால், மகர ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். புத்தாண்டின் தொடக்கத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் நல்ல செய்தியைப் பெறுவார்கள். குடும்பத்தினருடனான உறவு மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புத்தாண்டின் தொடக்கத்தில் சுற்றுலா செய்யும் வாய்ப்புக்கள் அமையும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி காலமானது சாதகமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் இருந்த பணிகள் இக்காலத்தில் சுமூகமாக முடிவடையு. கூட்டு தொழில் செய்பவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.
Tags:
Rasi Palan