தேசிய நடனப்போட்டியில் சாதனை படைத்த யாழ்.இந்து மகளிர் மாணவிகள் ..!!!

குழு வர்ணம் - 1ம் இடம்

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட தேசிய நடனப்போட்டியில் யாழ்.இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர் .

கடந்த புதன்கிழமை(28.12.2022) அனுராதபுரத்தில் இடம்பெற்ற தேசிய நடனப் போட்டியில் மேற்படி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான லாவணியா தட்சணாமூர்த்தி தனி ஐதீஸ்வரத்தில் முதலாம் இடத்தினையும், நிவேதனா பிரபாகரன் தனி பதம் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
 
மேலும், ராகவி கலைதாசன், நிவேதனா பிரபாகரன், யதுர்ஷினி குணநேசன், ருக் ஷிகா இராஜரட்ணம் , சியானா இராஜேந்திரன் , லிதுனா சுரேஸ்குமார், ஷன்ஜா கிருபாகரன் ஆகியோர் பங்குபற்றிய குழு வர்ணம் முதலாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதேவேளை, குறித்த சாதனையை நிலைநாட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், உறுதுணையாக நின்ற ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தனி ஐதீஸ்வரம் - 1ம் இடம் லாவணியா தட்சணாமூர்த்தி


தனி பதம் - 1ம் இடம் நிவேதனா பிரபாகரன்

Previous Post Next Post


Put your ad code here