ஊர்காவற்றுறையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு..!!!



குளியலறையிலுள்ள தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) காலை அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்றிருந்தனர்

குழந்தை வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் காலை 9.00 மணி அளவில் குழந்தை காணாது பெற்றோர் தேடிய போது தேவாலயத்தின் குளியலறைக்குள் இருந்த 20 லீட்டர் வாளிக்குள் இருந்து குழந்தை மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (06) காலை குழந்தை உயிரிழந்தது.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here