
வளிமண்டலத்தில் தூசித் துகள்கள் அதிகரித்ததன் காரணமாக இன்றும் கொழும்பின் வானம் பனிமூட்டம் போன்ற புகையால் மூடப்பட்டிருந்தது.
இதே நிலை நேற்று (07) நிலவியதுடன், காற்றுடன் கூடிய காலநிலையுடன் இந்திய குடாநாட்டில் இருந்து தூசி துகள்கள் நாட்டிற்குள் வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய வளி மாசுபாட்டின் தாக்கத்தினால் இலங்கையில் வளி மாசுபாடு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.
கொழும்பு, மன்னார், வவுனியா, கேகாலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தலைநகரில் காற்று மாசுவின் அளவு சாதாரண அளவை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news