நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு..!!!




நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் 390 என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, கடந்த வாரத்தில் கல்முனை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கையில் 68,928 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 27,844 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே கண்டறியப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயின் பரவலைக் கருத்தில் கொண்டு 41 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக அபாய வலயங்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here