முல்லைத்தீவில் வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை..!!!


முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் அறிக்கையின் பின்னர் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் டிசம்பர் 22ம் திகதி உயிரிழந்த நிலையில் வணிக நிலையத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

68 வயதுடைய அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின்போது அவர் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து பொலீசார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலீசார் வரளைக்கப்பட்டு தடையங்கள் திரட்டப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Previous Post Next Post


Put your ad code here