தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) நடைபெறவுள்ளதால் இன்று (17) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுலாக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளை இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இதற்கு நாடளாவிய ரீதியில் 334,698 மாணவர்கள் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.