சென்ரல் வோய்ஸ் - 2010 கொண்டாட்டம்..!!!


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அணியினரான சென்றல் வோய்ஸ் 2010ன் ஏற்பாட்டில் மத்திய கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 25/03/2023 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் யாழ்ப்பாணம் ரில்கோ சிற்ரி விருந்தினர் விடுதியில் வெகுவிமர்மையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இம் மாணவ அணியினருக்கு கற்பித்த 85. ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் தமது ஆசிரியர்களை நீண்ட காலத்தின் பின் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் ஆசிரியர்களும் தமது ஆசிரிய நண்பர்களையும் ஓய்வு பெற்றுச் சென்ற ஆசிரியர்களையும் இடமாற்ற பெற்ற ஆசிரியர்களையும் முன்னாள் அதிபர்களையும் சந்தித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் .இம்மாணவர்களினால் ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இராப்போசன விருந்துபசாரமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post


Put your ad code here