வெடுக்குநாறி மலைக்கு அனைவரும் அணி திரளுங்கள்: கஜேந்திரன் எம்.பி அழைப்பு..!!!



வெடுக்குநாறி மலை விக்கிரகங்கள் உடைப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளும் படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடுகையில்

வவுனியா வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை உச்சியிலே அமைந்திருந்த ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது இச்சம்பவத்தை கண்டித்து நாளை மறுதினம் வியாழக்கிழமை (30.03.2023 )அன்று நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரணமான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது அத்துடன் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள்
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.தர்மினி.
Previous Post Next Post


Put your ad code here