காற்று மாசுபாடு மீண்டும் அதிகரிப்பு..!!!


தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, இன்று (12) காலை நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா, கண்டி மற்றும் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று காலை மோசமான காற்றோட்டம் காணப்படுவதாகவும், உணர்திறன் உடையவர்களின் உடல்நிலை பாதிக்கப்படக் கூடியதாகவும் உள்ளதாக சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க காற்றின் தரச் சுட்டெண்ணின் படி நுவரெலியா மாவட்டத்தில் 66, கண்டி மாவட்டத்தில் 100, மட்டக்களப்பு மாவட்டத்தில் 80 என்ற பெறுமதி பதிவாகியிருந்த போதிலும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அதே பெறுமதி 100ஐத் தாண்டியுள்ளது.

அதிகபட்ச பெறுமதி கொழும்பு நகரிலிருந்து பதிவானதுடன் அந்த பெறுமதி 166 ஆக பதிவாகியுள்ளது. 

அந்த மதிப்புகள் ஆரோக்கியமற்றவை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here