மே மாதம் பிரதமராகிறார் மகிந்த? ஜோதிடர் சொல்லிவிட்டாராம்?


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

இதற்காக தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகவிருப்பதாக செய்தி வெளியாக்கப்பட்டிருந்தாலும், அதனை அவர் மறுத்திருந்தார்.

மகிந்தவை பிரதமராக்குவதற்கான ஆதரவு திரட்டும் பணிகளை மொட்டுக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் எதிர்வரும் மே மாதம் அவர் பிரதமராக நியமிக்கப்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோதிடர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கைகள் அமைதியாக முன்னெடுக்கப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post


Put your ad code here