ஊர்காவற்றுறை இறங்கு துறை இடிந்து விழுந்தது..!!!


காரைநகர் - ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது.

இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி அபிவிருத்தி அதிகார சபை இதைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் குறித்த இறங்குதுறை இடிந்து விழுந்துள்ளது. அதனால் படகு சேவையில் பயணிக்கும் பயணிகள் இடிந்து விழுந்துள்ள இறங்குதுறையில் ஆபத்தான நிலையில் நின்றே படகுகளில் ஏறி பயணத்தை மேற்கொள்கின்றனர்.

எனவே விரைவாக இதைத் திருத்தம் செய்து தமது சீரானதும் பாதுகாப்பானதுமான போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Previous Post Next Post


Put your ad code here