முல்லைத்தீவில் திருமணமாகி சில மாதங்களில் மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு..!!!


முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

கொல்லவிளாங்குளம் ,வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுதாஜினி (வயது-38) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here