பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ வைத்தியசாலையில் அனுமதி..!!!


பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கீழே தவறி வீழ்ந்து தலையில் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர்.

புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வரும் இவர் தமிழில் பாடிய 'வசீகரா', 'ஒன்றா ரெண்டா ஆசைகள்', 'யாரோ மனதிலே' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ வண்டனுக்கு இசை கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு கீழே தவறி விழுந்துள்ளார். அதில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிப்பட்டுள்ளது. இதையடுத்து சுயநினைவை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று இரவு கடுமையான கழுத்து வலி இருப்பதாக அங்கு இருப்பவர்களிடம் தெரிவித்துள்ளாராம். அதனால் அடுத்த நாளான இன்று அவரை பார்க்க சென்ற பொது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் திரையுலகினர் உள்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here