வெளிநாடு செல்லுபவர்களுக்கு இணையத்தளம் ஊடாக பதிவு செய்யும் வாய்ப்பு..!!!


தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு பணியகத்தின் இணையத்தள முறைமையின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் சுயப் பதிவை (online self registration) அணுகுவதன் மூலம் இந்தப் பதிவை மேற்கொள்ள முடியும் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
Previous Post Next Post


Put your ad code here