
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அது இலங்கையிலும் தாக்கம் ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றையதினம் உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 19.61 டொலர் அதிகரித்து, 1,923.19 டொலராக நிலவுகிறது.
சீனாவில் இருந்து எழுகின்ற கேள்வியின் அதிகரிப்பு தங்க விலை அதிகரிப்புக்கான காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த வாரங்களில் இலங்கையில் ஏற்பட்டிருந்த தங்கவிலையானது, உலக சந்தையை காரணம் காட்டி சடுதியாக மீண்டும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news