இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர் 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அன்று எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது.
யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அக்காலப்பகுதியில், தொண்டமனாறு அக்கரைப் பகுதியில் முகாமிட்டிருந்த ஶ்ரீலங்கா இராணுவத்தினர் அதே நாளில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சந்நிதிப் பகுதியில் முன்னேறிய போது இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே குறித்த தேர் எரிக்கப்பட்டது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஶ்ரீலங்கா இராணுவத்தால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.