யாழ். கோப்பாய் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு - மற்றுமொரு இளைஞன் படுகாயம்..!!!



யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பூதர்மடம் பகுதியை சேர்ந்த தவசீலன் வினோயன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை கோப்பாய் பூதர்மட சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here