யாழில் முகநூலால் நின்றுபோன திருமணம்..!!!


பெண் ஒருவர் முகப்புத்தகம் வைத்திருப்பதால் அவருடைய திருமணம் குழம்பிப்போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறானதொரு சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞன் ஒருவனுக்கு திருமண தரகர் மூலம் பெண் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த மணமகன் வீட்டாரும் பெண்ணை பார்த்து பிடித்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

திருமணத்திற்கான திகதி எடுக்கப்பட்ட நிலையில் மணமகளின் பெயரில் முகப்புத்தகம் இருப்பது மணமகனுக்கு தெரியவர இவ்விடயம் குறித்து மணமகன் மணமகளிடம் கேட்டுள்ளார்.

மணமகளும் முகப்புத்தகம் பொழுது போக்கிற்காக வைத்துள்ளேன் எனப் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் மணமகன் தன் பெற்றோரிடம் குறித்த திருமணம் தனக்கு வேண்டாமெனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த திருமணம் நின்று போயுள்ளது. திருமணம் செய்யும் நிலைக்கு வந்தும் பேஸ்புக்கால் குறித்த திருமணம் குழம்பிபோயுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here