கனடாவின் அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக இலங்கைத் தமிழர்..!!!


கனடாவில் ஆளும் லிபர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கெரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) கனடாவின் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது.

கனேடிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழர் ஒருவர் அமைச்சராக முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் அரசு பழங்குடியின உறவுகளுக்கான அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்காப்ரோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வரும் கெரி ஆனந்தசங்கரி, கடந்த 2015ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here