
நாட்டில் 2023 கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2ம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி முடிவடையவுள்ளது.
இதேவேளை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் 2ம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.