ராசிகளில் இந்த 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. இதைக் கொண்டு அந்த ராசிக்காரர்களின் குணநலன்கள் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் எப்போதும் பிறரால் ஏமாற்றப்பட்டு கொண்டே இருப்பார்கள். அவர்கள் எத்தனை நல்லது செய்தாலும், அவர்களுக்கு அதில் ஒரு சதவீதம் கூட திரும்ப கிடைக்காது.
இதைக் கேட்டவுடன் பெரும்பாலும் எல்லோருக்கும் அப்படித் தான் இருக்கிறது என்று பலரும் நினைக்கலாம். ஆனால் சிலர் தங்களுடைய செய்கையால் இது போல துன்பங்களை அனுபவிப்பதுண்டு. சிலர் ராசியே அப்படித்தான் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்கள் ஏமாறுவதில் இருந்து தப்பிக்க முடியாது. இது அந்த ராசியின் உடைய தன்மை. இது குறித்தான தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் உண்மைக்கு பேர் போனவர்களாக இருப்பார்கள். தனக்கு ஒரு சிறு உதவியை பிறர் செய்தாலும் அவர்களுக்கு பல மடங்கு நன்றி கடன் செய்யும் மிகப்பெரிய விசுவாசிகள். இவர்கள் தன்னைப் போலவே பிறரும் இருப்பார்கள் என்று கருதி போலித்தனமான மனிதர்களை நம்பி ஏமாந்து கொண்டே இருப்பார்கள். அதுமட்டுமின்றி இவர்களிடம் ரகசியத்தை பாதுகாக்கும் தன்மை இல்லாததால் அதை வெளியில் சொல்லி சிக்கலிலும் சிக்கிக் கொள்வார்கள்.
கடகம்
இந்த ராசிக்காரர்கள் பிறருக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் அதிக பாசக்காரர்களாக இருப்பார்கள். இவரை சுற்றியுள்ளவர்கள் இவரிடம் பாசத்தை காட்டுவது போல நடித்து ஏமாற்றி விடுவார்கள். இவரிடம் நடித்து காரியத்தை சாதித்துக் கொண்டவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் பிறரை நம்பி நம்பி ஏமாந்து கொண்டே இருப்பார்கள்.
துலாம்
இந்த ராசிக்காரர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை இவர்கள் பிறரை நம்புவதில் இவருக்கு நிகர் இவரே. யாரையும் சந்தேக கண்ணோடு பார்க்கத் கூட தெரியாது. இதனால் பலதரப்பட்ட மக்களிடம் எப்போதும் ஏமாற்றத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களில் இவர் முக்கியமான ராசிக்காரர் என்றே சொல்லலாம்.
தனுசு
இவர்கள் எத்தனை நல்லெண்ணத்துடன் பிறருடன் பழகினாலும் இவருடன் பழகுபவர்கள் பெரும்பாலும் இவருக்கு தீமை செய்யக்கூடியவர்களாகவே இருப்பார்கள். நாலு வார்த்தை நல்ல விதமாக பேசிவிட்டால் நண்பர் பகைவர் என்று எண்ணாமல் அவர்களுக்கு உதவி செய்வார்கள். கடைசியில் அவர்களாலேயே ஏமாற்றப்பட்டு நிற்பார்கள். இவர்கள் மனசாட்சிக்கு மிகவும் கட்டுப்பட்டவர்கள்.
மீனம்
பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதை மட்டுமே வெளிக்காட்ட தெரியும். மறந்தும் கூட தீமையை நினைத்துக் கூட பார்க்காதவர்கள். பிறரின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பு கொடுத்து நடக்க தெரிந்தவர்கள். இதனாலே இவர்கள் பல முறை ஏமாற்றப்பட்டு இருப்பார்கள். அது தெரிந்தும் இவர்களால் இந்த குணத்தை மாற்றிக் கொள்ள முடியாமல் தொடர்ந்து ஏமாறுவார்கள்.
Tags:
Rasi Palan