யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை..!!!


யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் ஒன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 5 அடி உயரம் கொண்ட பொது நிறமான நரைத்த தலைமுடியுடன் காணப்பட்ட குறித்த சடலம் நீல நிற மேல் சட்டை மண்ணிற சேலை அணிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

சடலமாக காணப்பட்ட குறித்த நபர் இன்று முற்பகல் 11-12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் இருந்துள்ளமை நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here