‘சப்ரைஸ் கிஃப்ட்’ வழங்குவதாக கூறி தங்கச் சங்கிலியை அபகரித்து சென்ற இளைஞர்..!!!


திருகோணமலை நகரில் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறீன் வீதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் ‘சப்ரைஸ் கிஃப்ட்’ கொடுக்கவந்துள்ளதாகக் கூறி பாசாங்கு செய்து வீட்டுக்குள் நுழைந்த நபரொருவர் மூதாட்டி அணிந்திருந்த ஐந்து பவுண் தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.

இலக்கத்தகடு இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரே இவ்வாறு தங்கச்சங்கிலியைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை துறைமுகப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நண்பர்கள் உறவினர்கள் தமக்கு தெரிந்தவர்களுக்கு தெரியாத நபர்கள் மூலம் ‘சப்ரைஸ் கிஃப்ட்’ வழங்கும் போக்கு அதிகரித்து வருகிற நிலையில் அதனை பயன்படுத்தி இவ்வாறான அபகரிப்பு சம்பவங்களும் அங்காங்கே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here