மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை காணிகளை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம்..!!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு கோரி பண்ணையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) மட்டக்களப்பு கொம்மாதுறையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கலடி மத்திய கல்லூரிக்கு விஷேட நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தாங்கள் மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் முறைப்பாடு செய்வதற்காக பண்ணையாளர்கள் எடுத்த முயற்சிக்கு பொலிஸார் தடை ஏற்படுத்தியதால் பண்ணையாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் மக்கள் பிரதிகள் பலரும் இணைந்திருந்தனர்.




Previous Post Next Post


Put your ad code here