யாழ் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்..!!!


யாழ் நகரில் காங்கேசன்துறை வீதியில் உள்ள கடையொன்றில் தீப்பற்றியதில் சேதம் ஏற்பட்டுள்ளது.

கோயில் சிலைகள் பித்தளை உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றிலேயே இன்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற யாழ் மாநகர சபை தீயணைப்பு படையினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மின்னொழுக்கு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here