பிரான்ஸில் இருந்து லண்டன் சென்ற யாழ் இளைஞர் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக காட்டு வழியாக லண்டன் சென்ற போது உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (04.10.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் இருந்து அதிக புலம் பெயர் அகதிகள் காடு மற்றும் கடல் வழியாக லண்டன் சென்று குடியேறி வருகின்றனர்.

இந் நிலையில் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த 33 வயதான சண்முகராசா டினேஸ் என்ற இளைஞர் லண்டன் செல்லும் நோக்கத்துடன் பயணித்த போது உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டவில்லை சடலத்தை பெறுப்பேற்க உறவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

குறித்த பயணம் மிகவும் ஆபத்து நிறைந்த பயணம் என்று தெரிவிக்கப்படுகின்றது
Previous Post Next Post


Put your ad code here