கில்மிஷாவை வரவேற்க வீதிகளில் திரண்ட மக்கள்..!!!(Video)


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டனர்.

வாகன தொடரணி மூலம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று அங்கிருந்து அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.

அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 3.30 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொலைக்காட்சி சீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா வெற்றியாளராக தெரிவாகியிருந்தார்.













Previous Post Next Post


Put your ad code here