கிளிநொச்சி வைத்தியாலையில் நோயாளர் விடுதிகளில் நோயாளர்கள் நிரம்பி வழிகின்ற நிலையில் குறித்த நோயாளர்கள் எந்த வித வசதியும் இன்றி தரையிலே படுத்து உறங்குவதாக கவலையை தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு வகையிலும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவும் தனியார் வைத்தியசாலைகளில் அதிகளவான பணம் விரையமாகுவதாக தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் அரச வைத்திய சாலைகளில் நாடிவரும் மக்கள் தமக்கான வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுவதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளர்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news