தங்காலை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரன்ன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அண்மையில் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ள நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அறிவிக்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news