சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: பிப்ரவரி 20 முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கப் போகுது..!!!


வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். அதோடு அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணி என்பதால், வாழ்வின் இந்த அம்சங்களில் மாற்றங்களை காணக்கூடும்.

தற்போது சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். பிப்ரவரி 12 ஆம் தேதி மகர ராசியில் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் சனியின் ராசிக்குள் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.

அதே சமயம் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே வேளையில் திருவோணம் சந்திரனின் நட்சத்திரம். இப்போது திருவோணம் நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.


மேஷம்

சுக்கிரன் திருவோண நட்சத்திரத்திற்கு செல்வால், மேஷ ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியுடன், நிதி நன்மைகளையும் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். வணிகர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். நிதி நிலை நன்றாக இருக்கும்.


தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது நல்ல பண வரவைத் தரும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வீட்டு வசதிகள் அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.


கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களை கொண்டு வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.
Previous Post Next Post


Put your ad code here