வேகமாக அதிகரிக்கும் கார்களின் விலை..!!!


நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலை நீடித்தால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்படி, டொயோட்டா பிரீமியர் 2017 இன் முந்தைய விலை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை ஒரு கோடியே அறுபது லட்சமாக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here