எம்பிலிபிட்டிய - நோனகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
51 வயதான சமந்திகா ஜயசிங்க என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு மரணித்தார்.
அவர் மாத்தறை புனித சர்வேஸ் கல்லூரியில் உயர் தர வணிகவியல் பிரிவின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதிபரான அவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் விபத்தின் போது காரில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மூவரும் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பிரதேசத்தில் உள்ள தமது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
எம்பிலிபிட்டிய நோனகம வீதியில் பெமினியன்வில பிரதேசத்தில் அவர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news