கிளிநொச்சியில் உள்ள பகுதி ஒன்றில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்றையதினம் (30.03.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.
மேலும் இச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 26 வயதுடைய மகேந்திரன் மதுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கயிற்றை பயன்படுத்தி மரம் ஒன்றில் குறித்த இளைஞன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news