யாழ். சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பஸ்தரின் சடலம் இன்றைய தினம் (31.03.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிணற்றிலிருந்து புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சின்னத்துரை தவராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர் இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.