கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல - குடாகம பகுதியில் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைய சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு (30-03-2024) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் குடாகம, அமித்திரிகல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
இறந்தவர் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அவரது தம்பி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் கூரிய ஆயுதத்தால் தனது மூத்த சகோதரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news