Friday 22 March 2024

கனடா வாழ் புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..!!!

SHARE

கனடா தனது நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், வரலாற்றில் முதல்முறையாக கனடாவில் மக்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக மட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று (21) கருத்து தெரிவித்த கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர்,

அடுத்த 3 ஆண்டுகளில், குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கட்டுப்பாடு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடு சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.

கனடாவில் நிலவும் வீட்டுப்பற்றாக்குறைக்கு தீர்வாகவும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்திற்கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சில மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கத்தால் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், கனடாவின் மக்கள் தொகையை 20% குறைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கனடாவிற்கு வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
SHARE