சிறுநீரக நோயினால் உயிரிந்த நபரின் பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி..!!!


நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே நுரையீரலில் பல் காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை வலேபொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரின் பிரேதப் பரிசோதனையிலேயே இவ்வாறு பல் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்றும், நீண்ட நாட்களாக நிமோனியா மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சில வருடங்களுக்கு முன்னர் இருந்தே பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மரண விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் தனது தனிப்பட்ட நலனில் அக்கறை செலுத்தவில்லை எனவும் பத்மேந்திர விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here