யாழ். போதனா வைத்தியசாலை தவறால் இளம் பெண் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் போது , வைத்தியர்களின் தவறினால் தனது சகோதரி உயிழந்துள்ளார் என சகோதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ் குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது அவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறே காரணம். இது தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுத்து எனது சகோதரியின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என தெரிவித்தார் .
Previous Post Next Post


Put your ad code here