வவுனியாவில் தாயும் சேயும் உயிரிழப்பு..!!!



வவுனியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தவறி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித் தாய் நேற்று குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மதவாச்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குளியலறையில் இருந்து மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான முயற்சியை வைத்தியர்கள் மேற்கொண்டனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here