இன்றைய ராசிபலன் - 25.10.2024..!!!



மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள் தடைகள் வரும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்திலும் வியாபாரத்திலும் கொஞ்சம் அனுசரணை தேவை. முன்கோபம் வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நஷ்டம் உண்டாக கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்ய வேண்டாம். அடுத்தவர்களை நம்பி பணம் காசு கடனாக கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வியாபாரத்தில் மூன்றாவது மனிதரை கண்மூடித்தனமாக நம்பாதிங்க. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. தள்ளுபடியில் எந்த பொருட்களையும் வாங்கி ஏமாற வேண்டாம் ஜாக்கிரதை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீங்கள் வெளியூர் பயணம் செல்வதற்கு உண்டான வேலைகளை துவங்கி விடுவீர்கள். பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வேண்டும் அல்லவா. உங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளும் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எல்லா புது விஷயங்களையும் சீக்கிரமாக கற்றுக் கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். மன நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சில பேருக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். போனஸ் வரலாம். சம்பளம் வரலாம். இப்படி ஏதாவது ஒரு வகையில் கைக்கு பணம் வரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கெட்ட பெயர் வாங்கிய இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். நீங்க தூர பயணம் நன்மையை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை வீட்டு சாப்பாடு சாப்பிடுவது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாளாக இருக்கும். வீட்டில் சுப காரியை பேச்சுக்கள் துவங்கும். திருமணம் ஆகாத உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சுப செலவுகள் வரும். அதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் வாழ்க்கையில் புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கும். அனுபவரீதியாக நிறைய நல்ல விஷயங்கள் கிடைக்கும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை நன்றாக புரிந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு மனதுக்கு ஆறுதல் தரும். ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த வாழ்க்கையில் சோர்வு வரக்கூடாது. அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயமும் பதட்டமும் இருக்கும். இதனாலே சில வேலைகளை சரியாக செய்ய மாட்டீர்கள். வேலையில் பிழைகள் உண்டாகும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை பதட்டப்படாமல் செய்வது தான் இன்று உங்களை காப்பாற்றும். அரைகுறை மனதோடு ஒரு வேலையை கையில் எடுக்க வேண்டாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். முதலீடு செய்யலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். காதல் கைகூடும் சந்தோஷம் பெருகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது. சிரித்து சிரித்து கண்களில் தண்ணீர் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கேளிக்கை கிண்டல் என்று இன்று உங்களுடைய நாள் சந்தோஷமாக செல்லும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். வேலையிலும் தொழிலிலும் அதே அளவு அக்கறை காட்ட வேண்டும். விளையாட்டுப் போக்கில் எந்த தவறும் செய்யக்கூடாது. மனபாரமெல்லாம் குறையும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற குழப்பங்கள் இருக்கும். சில முடிவுகளை எடுப்பது தடுமாற்றம் இருக்கும். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப உறவுகளோடு பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று காரிய சித்தி நிறைந்த நாளாக இருக்கும். கையில் எடுத்த காரியத்தை சரிவர செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதிநிலைமை மட்டும் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். போனஸ் வந்தவர்கள் தீபாவளி செலவை சமாளிக்கலாம். போனஸ் வராதவர்களுக்கு கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை நினைத்து வருத்தப்படுவீங்க. அவ்வளவுதான் எல்லாம் சரியாகிவிடும்.
Previous Post Next Post


Put your ad code here