தமிழ் தேசியத்தின் எழுச்சிக் கனவுகளுடன் சுயநலமற்று தன்நலம் கருதாது உங்களுடன் இறுகக் கைகோர்த்து இறுதி வரை பயணிப்பேன் இது என் வாக்குறுதி மட்டும் அல்ல மனஉறுதியும் கூட என் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வ.பார்த்திபன் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
ஆரம்பம் முதல் தனது இறுதிக்காலம் வரை தமிழ் தேசியத்தின் மீது தீராத காதல் கொண்ட என்னுடைய அப்பாவின் அரசியல் சிந்தனைகளையும் கனவுகளையும் தொடர்ந்து கொண்டு செல்வதே ஒரு மகனாக என்னுடைய கடமையாகும்.
இத் தேர்தலில் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் என்னுடைய வாழ்வியலில் தேர்தல் பொதுவாழ்வியல் எவ்வாறு அமையும் என்பதனையும் உள்ளடக்கியதுமாக என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனம் அமையும். அது வெறும் சொற்களாக அல்லது வெறும் வாக்குறுதிகளாக மட்டும் இருக்காது. உலகின் தலைசிறந்த சொல்லாகிய செயல்களாகவே இயன்றவரை இருக்கும். என அவர் பதிவிட்டுள்ளார்