Thursday, 31 October 2024

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்..!!!

SHARE

இன்று (ஒக்டோபர் 31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

இதன்படி, பெற்றோல் 92 ஒக்டேன் மற்றும் ஓட்டோ டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாது.

சுப்பர் டீசலின் விலை 06 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை லிட்டருக்கு 313 ரூபாயும், பெற்றோல் 95 லீற்றருக்கு 06 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை லீட்டர் 371 ரூபாயாகும்.

புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு:

பெற்றோல் 92 ஒக்டேன் - ரூ. 311 (மாற்றமில்லை)

ஓட்டோ டீசல் - ரூ. 283 (மாற்றமில்லை)

சூப்பர் டீசல் - ரூ. 313 (ரூ. 06 குறைக்கப்பட்டது)

மண்ணெண்ணெய் - ரூ. 183 (மாற்றமில்லை)

பெட்ரோல் 95 ஒக்டைன் - ரூ. 371 (ரூ. 06 குறைக்கப்பட்டது)
SHARE