யாழில். 34 வருடங்களுக்கு பின்னர் வீதி திறப்பு..!!!


யாழ்ப்பாணம் - வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் சுமார் 34 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த அச்சுவேலி - வசாவிளான் வீதி இன்று காலை 6 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.

சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான வீதி 34 வருடங்களாக பூட்டப்பட்டுள்ளதால் மக்கள் பல கிலோ மீற்றர் பயணம் செய்து அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அறுரகுமார திஸாநாய க்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் குறித்த வீதியை திறந்து வைப்பது தொடர்பாக கூறியதுடன், குறித்த வீதி திறக்கப்படாமையினால் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டி யிருந்தார் இந்நிலையில் குறித்த வீதியை திறப்பது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று குறித்த வீதி யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியினால் திறந்துவைக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here