சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்..!!!(Video)


மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்.தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனுஷ்ட்டிக்கப்படுவது வழமை,

அந்தவகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் தயாராகி வருகிறது.

நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது,

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


இதன் போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















Previous Post Next Post


Put your ad code here