யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்..!!!


தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில்
முற்படுத்தப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்
குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் சார்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் வழக்கில் ஆஜரானார்.
Previous Post Next Post


Put your ad code here