வல்வெட்டித்துறையில் பிறந்த நாள் கொண்டாடியவர்கள் மீதும் பாய்ச்சல் : பொலீஸாரால் விசாரணை..!!!


வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 26 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் பிறந்த வீட்டில் வைத்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடியவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்துதுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் சுகயீனம் காரணமாகப் பொலீஸ் நிலையத்துக்கு வர முடியாது என அறிவித்ததை அடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற பொலீஸார் வாக்கு மூலத்தைப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகளில் காணப்பட்டவர்கள் சிலர் இன்று வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கி உள்ளனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
Previous Post Next Post


Put your ad code here