மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் சரியாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். முதலீட்டில் அவசரம் வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு அதிக சூடு தரும் பொருளை சாப்பிட வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம். அதிக பணம் கொடுத்து எந்த ஒரு பொருளையும் வாங்காதீங்க. நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். வேலையில் திருப்தி உண்டாகும். நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் இருந்த வேலைகளை எல்லாம் இன்று செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவுகளுடன் ஒன்று சேர்ந்து நேரத்தை செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். மனம் விட்டு பிரச்சினைகளை சொல்லி மன பாரத்தை குறைத்துக் கொள்வீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுடைய புத்தி மயங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யார் என்ன சொன்னாலும் நம்பாதீர்கள். ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்கள் பேச்சை எதிர்த்து பேசக்கூடாது. அடம்பிடித்து எந்த ஒரு காரியத்தையும் சாதிக்கக் கூடாது. வண்டிகா வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட மறக்க கூடாது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நட்பு கிடைக்கும். புதிய உறவுகள் வந்து சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. திருமணம் காது குத்து இது போன்ற நிகழ்ச்சிகள் உங்கள் வீட்டில் கூடிய விரைவில் நடக்க இன்னைக்கு பிள்ளையார் சுழி போடுவீங்க. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன கவலை இருக்கும். எப்போதுமே பழைய பிரச்சினைகளை நினைத்து நேரத்தை வீணடிக்க கூடாது. ஆனால், இன்று உங்களுக்கு அதுதான் நடக்கப்போகிறது. உஷாராக இருந்து கொள்ளுங்கள். மனக்கவலை கஷ்டங்கள் துன்பங்கள் இருந்தாலும் வேலையில் உங்களை நீங்கள் ஏற்பாடுபட்டாவது ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை கரம் பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. காதல் விஷயங்களை வீட்டில் வெளிப்படையாக பேசி விடுங்கள். உங்களுக்கு சாதகமாக தான் நிச்சயம் முடிவு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிலையான மனது இருக்காது. ஏதோ ஒரு பயம் ஆழ்மனதில் உறுத்தி கொண்டே இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.வேலையில் சின்ன சின்ன பின்னடைவுகள் ஏற்படும். கூடுமானவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை மேலோங்கும். தெளிவாக பேசுவீர்கள். பிரச்சனைகளுக்கு எளிதாக ஒரு தீர்வை கொடுப்பீர்கள். உங்களை பார்க்கும் போது அடுத்தவர்களுக்கு மிகவும் பொறாமையாக இருக்கும். அந்த அளவுக்கு இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையப் போகிறது. என்ஜாய் பண்ணுவீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரிடம் பேசும் போது கவனம் தேவை. புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் கடனுக்கு எந்த பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம். ஜாக்கிரதையாக இருக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய வேலை தேடலாம். இருக்கும் வேலையில் ப்ரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். ஆரோக்கியத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்க கூடிய நாள். சாதனை படைக்கக்கூடிய நாள். திறமையாக செயல்பட்டு பிரச்சனைகளை சமூகமாக முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பாத்துக்கோங்க, பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
Tags:
Rasi Palan